வேலூரில் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ’ரஹானே’ மாணவர்கள் மத்தியில் பேச்சு

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே மாணவர்கள் மத்தியில் பேசினார். வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 4- நாட்கள் நடைபெறும் (ரிவேரா-23) சர்வதேச கலை மற்றும் கலாச்சார விளையாட்டு திருவிழா இன்று…

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே மாணவர்கள் மத்தியில் பேசினார்.

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 4- நாட்கள் நடைபெறும் (ரிவேரா-23) சர்வதேச கலை மற்றும் கலாச்சார விளையாட்டு திருவிழா இன்று தொடங்கியது.

வேலூர் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் 4- நாட்கள் நடைபெறும் (ரிவேரா-23)
சர்வதேச கலை மற்றும் கலாச்சார விளையாட்டு திருவிழா இன்று தொடங்கியது.
4 -நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், முன்னணி கிரிக்கெட் வீரா், திரைப்பட
நடிகர்கள் நடிகைகள், பின்னணி பாடகா்கள் உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க
உள்ளனர். 20 நாடுகளைச் சேர்ந்த கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்ள
உள்ளார்கள்.

தொடக்க நாளான இன்று இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே கலந்துகொண்டு
தேசிய கொடியேற்றி கலைவிழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரியில் செடியினை
நட்டதோடு, விஐடி பல்கலைக்கழக மாணவர்களோடு செல்பி எடுத்துக்கொண்டார்.

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய ரஹானே ‘பேராசிரியர்கள் முதல் அலுவலக உதவியாளர் வரை, அனைவருக்கும் ஒரே அளவு மதிப்பளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று, வேலூர் விஐடி பல்கலைக்கழக சர்வதேச கலை விழாவில் ரஹானே மாணவர்கள் மத்தியில பேச்சு . மேலும் அவர், இந்த கல்லூரி பருவம் மிகவும் அழகானது மீண்டும் எனக்கு இந்த கல்லூரி பருவம் கிடைக்காதா என பல நாட்கள் ஏங்கினேன்.

நான் நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவன் எனக்கு வாழ்க்கை கொடுத்தது இந்த
கிரிக்கெட் தான் என்றும், தன்னுடைய ரோல் மாடல் ராகுல் டிராவிட் , சச்சின் , தோனி
என்றார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன்.எனக்கு கிரிக்கெட்டை தவிர்த்து பயணம்( Driving) செய்ய மிகவும் பிடிக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கேள்விகளுக்குப் பதிலளித்த ரஹானே,
சிஎஸ்கே சிஎஸ்கே என மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியதில் ரஹானே ஆனந்தம்
அடைந்தார்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.