85-ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த் தொற்று குறைந்துவரும் நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,332-ஆக குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட கொரோனா அறிக்கையில, “ கடந்த…

நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த் தொற்று குறைந்துவரும் நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,332-ஆக குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட கொரோனா அறிக்கையில, “ கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 84,332-ஆகவும் நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,93,59,155-ஆக உள்ளது. கொரோனாவால் கடந்த 24மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4002-ஆக உள்ளது. கொரோனாவால் நாட்டில் 3,67,081 பேர் உயிரிந்துள்ளனர்.

தொடர்ந்து 30-வது நாளாக குணமடைவோரின் எண்ணிக்கை தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,21,311- ஆக உள்ளது. கொரோனாவால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,79,11,384- ஆகும். நாடு முழுவதும் 10,80,690 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 34 லட்சத்து 33 ஆயிரத்து 763 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 24 கோடியை 96 லட்சத்து 304 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கபபடடுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.