இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 லட்சத்து 70 ஆயிரத்து 240 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 30,615 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது நேற்றைய எண்ணிக்கையை விட 11% அதிகம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 514 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், அதே நேரத்தில், மொத்தமாக இதுவரை 4 கோடியே 18 லட்சத்து 43 ஆயிரத்து 446 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 173.86 கொரோனா தடுப்பூசி இதுவடை செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







