பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பி லஹரி காலமானார். அவருக்கு வயது 69. இந்தி, வங்காளம், குஜராத்தி, தமிழ், கன்னடம் எனப் பல மொழிகளிலும் இவர் இசையமைத்துள்ளார்.
80-90களில் டிஸ்கோ எனப்படும் மேற்கத்திய இசை வடிவம் இந்திய சினிமாவில் உச்சத்தில் இருந்தது. அதை மிகவும் பிரபலப்படுத்தியதில் இசை அமைப்பாளர் பப்பி லஹரி முக்கிய பங்கு உண்டு. 1973ம் ஆண்டு நன்ஹா சிகாரி எனும் படத்தில் அறிமுகமான இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சல்தே சல்தே, டிஸ்கோ டான்ஸர், ஷராபி ஆகிய பாடல்கள் இவரது இசையில் ஆல்டைம் ஹிட் பட்டியலில் இருப்பவை.
கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அவர், கடந்த ஒருமாதமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சையிலிருந்து திங்கட்கிழமை வீடு திரும்பிய நிலையில், நேற்று இரவு அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 69.







