முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

கொரோனா பாதிப்பு 3 கோடியை கடந்தது

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 82 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் ஒரே நாளில் 18 லட்சத்து 59 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 54 ஆயிரத்து 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் புதிதாக ஆயிரத்து 321 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 981ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 68 ஆயிரத்து 885 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 64 லட்சத்து 89 ஆயிரத்து 599 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மத்திய அரசின் பட்ஜெட் யாருக்கும் பயன் பெறாத மோசடி பட்ஜெட்: ப.சிதம்பரம்!

Jayapriya

தனது மகளின் தலையை வெட்டி எடுத்த தந்தை; உ.பியில் கொடூரம்!

Halley karthi

அண்ணாத்த….அண்ணாத்த..’தாண்டி வா கடமைகள் காத்திருக்கு’

Saravana Kumar