சென்னை மாநகர பேருந்துகளில் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டையை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ( 16.05.2021 முதல் 15.06.2021 வரை ) பயணம் செய்திட வழங்கப்பட்டுள்ள, விரும்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையினை, வரும் ஜூலை மாதம் ( 15.07.2021 வரையில் ) பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் வழங்கப்படும் பயண அட்டையின் கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிடுமாறு பல்வேறு தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளை ஏற்று வரும் 26.06.2021 வரையில், பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனடிப்படையில், வரும் 26.06.2021 வரை மாநகர் போக்குவரத்துக் கழக 29 மையங்களில் இந்த பயண அட்டையினை பொதுமக்கள் பெற்றுக்கொண்டு, வரும் 15.07.2021 வரை பயணம் செய்யலாம்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் , ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட இடத்திற்கு மாத அடிப்படையில் பயணம் செய்திட , மாதாந்திர பயண சலுகைச் சீட்டு ( Monthly Season Ticket ) ( 1 ம் தேதி முதல் 22 ம் தேதி வரையில் ) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பயண சீட்டும் , மாதம் ஒன்றுக்கு அதிகப்பட்சமாக , 40 ஆயிரம் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.