இந்தியா முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 31,443 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 443 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 118 நாட்களில் குறைந்த அளவாகும். கடந்த ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 2020 பேர் பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4 லடசத்து 10ஆயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், மேலும், 49 ஆயிரத்து7 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 63 ஆயிரத்து 720 ஆக உள்ளது. நாடு முழுவதும் தற்போது 4 லட்சத்து 32 ஆயிரத்து 778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 38 கோடியே 14 லட்சத்து 67 ஆயிரத்து 646 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.” இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







