மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் தொடரில் ஆசியவில் உள்ள நாடுகளின் மகளிர் ஏ அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இந்திய மகளிரணி ராதா யாதவ் தலைமையில் விளையாடி வருகிறது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா ஏ அணியும் குரூப் பி பிரிவில் வங்கதேசம் ஏ அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக தேஜல் ஹசாப்னிஸ் 51 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து இலக்கை விரட்டி களமிறங்கிய வங்கதேச அணி 19.1 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது.








