“மனது சுத்தமாக இருப்பவர்கள் தான் பெரிய மனிதர்கள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

“மனது சுத்தமாக இருப்பவர்கள் தான் பெரிய மனிதர்கள்” என்றும் “அதிக அளவு பணம் இருந்தால் தர்மம் செய்யுங்கள்” என்றும் குருநானக் ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னையில் ஜி.என். செட்டி சாலையில்…

“மனது சுத்தமாக இருப்பவர்கள் தான் பெரிய மனிதர்கள்” என்றும் “அதிக அளவு பணம் இருந்தால் தர்மம் செய்யுங்கள்” என்றும் குருநானக் ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னையில் ஜி.என். செட்டி சாலையில் இருக்கும் குருத்ராவில் நடந்து வரும் குருநானக் ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். தி.நகரில் நடைபெற்ற குருநானக் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ஆளுநர் ரவி ஹிந்தியில் பேசினார்.

குருநானக் ஜெயந்தி விழாவில் ஆளுநர் ரவி பேசுகையில், இந்தியாவிற்கு எப்போதும் கடவுளின் கருணை உண்டு. அரசியல் ரீதியாக, மத ரீதியாக எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ குருநானக் பிறப்பெடுப்பார். உலகின் பல இடங்களுக்கும் சென்று உண்மையை குருநானக் பரவச் செய்தார். குருநானக் இலங்கை செல்லும் போது ராமேஸ்வரம் வழியாக சென்று இருக்கிறார். தமிழகத்திற்கும் வருகை புரிந்திருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க குருதுவார் ராமேஸ்வரத்தில் இன்றும் இருக்கிறது.

கடவுள் உண்மையாக இருக்கிறார் அவர் யாருக்கும் பயப்பட மாட்டார். கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்க வேண்டும்.முன்னுரிமை பின்னுரிமை என எதுவும் கிடையாது. மனது சுத்தமாக இருப்பவர்கள் தான் பெரிய மனிதர்கள். கோவிலுக்கு சென்று நூறு தேங்காய் உடைப்பது முக்கியமில்லை. விடுமுறை போட்டுவிட்டு கோவிலுக்கு செல்ல தேவையில்லை. கடவுள் மனதில் இருக்கிறார். கடுமையாக உழைக்க வேண்டும். அதிக அளவு பணம் இருந்தால் தர்மம் செய்யுங்கள்.

வேற்றுமை இல்லாத இந்திய நாட்டை இந்தியாவாக ஒன்றிணைக்க பல முயற்சிகள் மேற்கொண்டவர் குருநானக். அனைவரும் கடவுளின் குழந்தைகள் தான். ராஜாக்கள் முதல் அறிஞர்கள் வரை அனைவருக்கும் பிறப்பு கொடுத்தவர்கள் பெண்களே. எனவே பெண்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என குருநானக் அப்போதே வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.