இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 24ம் தேதி தமிழ்நாடு வருகை!

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் (ஆக. 24) தமிழ்நாடு வருகிறார்.

நாட்டின் 17 வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இருவரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் (ஆக. 24) தமிழ்நாடு வருகிறார்.

அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளார். மேலும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்ட உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.