#IndependenceDay – செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.  78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி…

டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார். 

78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். அவரை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து 11வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றினார். இவ்விழாவில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடியினர், பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட மத்திய அரசின் நலத் திட்டங்களால் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சுமார் 6,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த விழாவையொட்டி, டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.