ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த முறை முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை. முன்வரிசை இடங்கள் மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு நடுவில்தான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் அமர்ந்திருக்கும் ராகுல் காந்தியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்திக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்படாதது குறித்து இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.








