2-வது டி-20 போட்டி: இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது வது டி-20 போட்டியில், முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 154 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள்…

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது வது டி-20 போட்டியில், முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 154 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. முதல் டி-20 போட்டி கடந்த 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்தது. அதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டி-20 போட்டி ராஞ்சியில் இன்று நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு பதிலாக ஹர்ஷல் படேல் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியின்போது முகமது சிராஜ், கையில் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக ஹர்ஷல் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இது முதல் போட்டி.

நியூசிலாந்து அணியில் பெர்குசானுக்குப் பதிலாக, ஆதம் மில்னே இணைந்துள்ளார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி, அதிரடியாக ஆடியது. 15 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த் மார்டின் குப்தில், தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மிட்செல் 31 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார். அடுத்து மார்க் சாப்மன் வந்தார். கடந்த போட்டியில் அதிரடி காடிய அவர், இந்த போட்டியில் 21 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பிலிப்ஸ் 21 பந்துகளில் 34 ரன்களும் டிம் செபர்ட் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில், நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில், அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டு களையும் அஸ்வின், அக்‌ஷர் படேல், தீபக் சாஹர், புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி, பேட்டிங் செய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.