டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிகொள்ள போவது யார் என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 253 ரன்கள் குவித்தது. அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்து அசத்தினார்.
தொடர்ந்து 254 என்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை விரட்டி களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேனகளும் அதிரடி காட்டினர். 45 பந்துகளுக்கு சதம் விளாசிய ஜேக்கப் பெத்தேல் இந்திய அணி ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தார்.
இருப்பினும் போட்டியின் இறுதிகட்டத்தில் இந்திய பௌலர்கள் ஆட்டத்தை மீட்டெடுத்தனர். இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கண்டுகளிக்க வருண் தவான், அனில் கபூர், ரன்பீர் கபூர், ஆலியா பட், கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, மற்றும் அஹான் ஷெட்டி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வருகை தந்திருந்தனர்.
மேலும் இந்திய் அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவி சாக்ஷியுடன் போட்டியை கண்டுகளித்தார்.
தல போர் எ ரீசன் (THALA FOR A REASON)
இந்த சூழலில் இந்தியாவின் வெற்றியையும் தோனியையும் தொடர்பு படுத்தி THALA FOR A REASON என்ற மீம்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் 89 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 7 சிக்சர்களை அடித்தார்.
அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சதம் விளாசிய ஜேக்கப் பெத்தேலும் 7 சிக்சர்களை பறக்க விட்டார். இங்கிலாந்து அணியும் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் குவித்தது.
இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்படி போட்டியின் பல்வேறு எண்களில் தோனியின் ஜெர்சி நம்பர் 7 இடம் பெற்றுள்ளதால் இந்திய அணியின் வெற்றிக்கு தோனியே காரணம் என்று கூறி ரசிகர்கள் எக்ஸ் உள்ளிட்ட சமூக தளங்களில் THALA FOR A REASON என்று பதிவிட்டு வருகின்றனர்.










