விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; இந்தியா 300 ரன்கள் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மான்கில் மற்றும் கேப்டன் விராத் கோலி ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இருப்பினும் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா, 161 ரன்களிலும், மறுமுனையில் அரைசதம் கடந்த ரகானே 67 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அஸ்வின் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களை எடுத்தது. ரிஷப் பண்ட் 33 ரன்களுடனும், அக்சர் படேல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி மற்றும் ஜாக் லீச் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement:
SHARE

Related posts

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்

Gayathri Venkatesan

இந்திய அணியில் மீண்டும் ‘தல’ தோனி

Saravana Kumar

இந்தியா – இலங்கை முதல் டி-20, நாளை தொடக்கம்: தேவ்தத்திற்கு வாய்ப்பு?

Gayathri Venkatesan

Leave a Reply