சென்னை சேப்பாக்கத்தில் பீல்டிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மொயீன் அலியிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர் ஒருவரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் வலிமை. கொரோனாவுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போதிருந்தே அஜித் ரசிகர்கள் படம் குறித்து அப்டேட் கேட்டு வருகின்றனர். இருப்பினும் படம் தொடர்பான எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளிடையே 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்தப்போட்டியை காண வந்த ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்டு பதாகைகள் எடுத்து வந்தனர். அந்தப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலியிடன் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை பட அப்டேட் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
அதில், பீல்டிங் செய்து கொண்டிருந்த போது மொயீன் அலியை அலி பாய் என அழைத்த அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்கிறார். அதை கேட்ட மொயீன் அலி என்னவென்று தெரியாமல் சிரிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகிறது.