நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து உடனே விவாதகிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுப்பட்டனர். இதைத்தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் கூடியது.
அப்போது அரசுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா- 2026 இன்று கடும் அமளிக்கு இடையே மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மசோதவை தாக்கல் செய்தார்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி திருச்சி சிவா கூறியதாவது, “ நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், கண் துடைப்புக்காக தர்மேந்திர பிரதான் பதவி விலக செய்யப்பட்டுள்ளார். அதேபோல மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கண் துடைப்புக்காக கொண்டு வரப்படும் வினாத்தாள்கள் கசிவு தொடர்பான மசோதா எங்களுக்கு தேவையில்லை . நீட் விவகார மசோதாவில் திருத்தம் வேண்டாம் முழுமையாக நீட் தேர்வு ரத்து செய்யுங்கள். தண்டனை அதிகரிப்பால் மட்டும் நீட் மோசடியை தடுக்க முடியாது.
பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வால்
நூற்றுக்கணக்கான மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஏற்கனவே இருந்த சட்டத்தை தான் தற்போது திருத்தி மீண்டும் கொண்டு வருகிறார்கள் குற்றம் செய்பவர்களுக்கு இதில் கொண்டு வரும் திருத்தங்கள் ஒரு பொருட்டே கிடையாது எனவே இது போன்ற நடவடிக்கைகளை விட்டுவிட்டு, மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ,
இதனை தான் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது
அரசாங்கத்தின் பிடிவாதம் இளம் தலைமுறையினரை பலி கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டும் என குரல் எழுப்புகிறோம். ஆனால் எங்களின் குரல்கள் முடக்கப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபடுகின்றனர் என்று கூறுகிறார்கள், எங்கள் முயற்சி தொடரும் மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.




