மதுரை திருநகரில் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவம்!

மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி சம்பவம் அரங்கேறியுள்ளது. மர்ம நபரை சிசிடிவி கொண்டு போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் திருநகர் வெற்றி விநாயகர் கோவில் பகுதியில்…

மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி சம்பவம் அரங்கேறியுள்ளது. மர்ம நபரை சிசிடிவி கொண்டு போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருநகர் வெற்றி விநாயகர் கோவில் பகுதியில் வசித்து வருபவர் மல்லிகா வயது 62 இவர் மதுரைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

தனியாக வருவதை நோட்டமிட்ட மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளனர். திருநகர் 2வது பேருந்து நிலையம் அருகில் ஆள் நடமாட்டம் இல்லாததைக் சாதகமாக பயன்படுத்தி கொண்டு, மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து திருநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சிசிடிவி கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.