சென்னை தலைமைச் செயலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், அவர்கள் அங்கிருந்து திடீரென கோட்டையை நோக்கி பேரணியாக நடந்து சென்றனர். மேலும், தலைமைச் செயலகம் அருகே, அவர்கள் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதுடன், கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.இதையடுத்து, அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது, தமிழக அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.