சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கு அமல்

சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், ஷாங்காய் மாகாணத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது. உலக…

சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், ஷாங்காய் மாகாணத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா வைரஸ் தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அனைத்து நாடுகளும் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பதால் அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. வைரஸ் பரவலின் தன்மை ஓரளவு குறைந்துள்ளதால் அனைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை படிப்படியாக விலக்கிக்கொண்டுள்ளன.

இந்நிலையில், சீனாவில் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருவதால், அங்கு பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷாங்காய் மாகாணத்தின் புடோங் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால், அந்த மாவட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரிசோதனை செய்ய மட்டுமே வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், குடியிருப்புவாசிகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் திறந்தவெளி பகுதிகளில் நடக்கவும் தடைவிதித்துள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்வதற்கான இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.