உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய படைகள் குறைப்பு என்பது ஏமாற்றும் செயல் என அமெரிக்கா சாடியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே துருக்கியில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து, துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நேற்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன்படி, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள தங்கள் நாட்டுப் படைகளை குறைக்கப்பதாக ரஷ்யா உறுதி அளித்துள்ளது. இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற போரின் தீவிரம் குறையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்படவில்லை என்றும், இடமாற்றம் தான் செய்யப்படுவதாக பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். மேலும், கீவில் படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்ய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








