மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்தது இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் காரணமாக கடந்த 16-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும் தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 29 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.