முக்கியச் செய்திகள் விளையாட்டு

காமென்வெல்த் போட்டி; ஸ்குவாஷ் காலிறுதியில் ஜோஷ்னா

காமென்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 இல் இந்திய அணியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022 ஜூலை 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காமென்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளது. 72 நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா நியூசிலாந்தின் கேட்லின் வாட்ஸை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஜோஷ்னா கனடாவின் ஹோலி நாட்டனை எதிர்கொள்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; முதல் இன்னிங்ஸில் 191 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!

Dhamotharan

வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

EZHILARASAN D

”ஸ்டாலினின் ஆட்சி விளம்பர ஆட்சி” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

EZHILARASAN D