இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும் சுத்தமாக முடங்கின. உலகமே லாக்டவுனில் பூட்டிக் கிடந்ததெல்லாம், கொரோனா செய்த மாயம். ஏராளனமான உயிர்பலி, பொருளாதார நஷ்டம், வாழ்வாதாரம் பாதிப்பு என மக்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கொரோனா கொடூரம் காட்டி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை நெருங்கும் நிலையில், மக்கள் இப்போதுதான் மீண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் வைரஸ், கடந்த மாதம் 24-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறிப்பட்டது.
இந்த தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. கர்நாடாகா, குஜராத், மகாராஷ் டிரா, ராஜஸ்தான் மாநிலங்களிலும், டெல்லியிலும் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிதாக 2 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து வந்த அவரது நண்பருக்கும் ஒமிக்ரான் வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை 10 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.