மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக கடந்த 3-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் ஆகியவை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரசணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனுடையோர் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனுடையோர்களுக்கும் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஓய்வூதியத்தை, வரும் ஜனவரி மாதம் முதல் வழங்க, 65 கோடியே 89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.