ஓய்வு பெற்ற முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் முன்னாள் தலைவராக இருந்தவர் 16-ம் பெனடிக்ட். போப் பதவியிலிருந்து விலகிய பின்னர், அவர் இத்தாலியின் வாடிகனில் அமைந்துள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இதனையடுத்து வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சில தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை மேலும் மோசமானது. அவருக்காக பிரார்த்தனை செய்ய போப் பிரான்சிஸ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, அவர் இன்று காலமானார்.
16ம் பெனடிக்ட்டின் மறைவை அதிகாரப்பூர்வமாக வாடிகன் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் போப் 16ம் பெனடிக்ட்-இன் உடல், வாடிகனில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் ஜனவரி 2-ம் தேதி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1440களுக்குப் பின்னர், போப் பதவியை ராஜினாமா செய்த முதல் நபர் 16ம் பெனடிக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.