முக்கியச் செய்திகள் சினிமா

பிரபல பாடகர் கேகே உயிரிழப்பு – பிரபலங்கள் இரங்கல்

திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் உயிரிழந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியவர் கிருஷ்ணகுமார் குன்னத். 53 வயதான கிருஷ்ணகுமார் குன்னத், நேற்றிரவு கொல்கத்தாவில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன் பின்னர் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். அவரது பாடல்கள் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தவை என கூறியுள்ளார். அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘பாஜகவில் இணைகிறார் ஹர்திக் படேல்’

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், என் உயிரின் உயிரே மறைந்தது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகுமார் குன்னத் பாடிய கடைசி பாடலான கொஞ்சி கொஞ்சி பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, ​​அவர் மறைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram