முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்கட்டணம் உயர்வு; விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்தது. இதை தொடர்நது மின்கட்டணம் உயர்வு குறித்து கருத்துகேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும நடத்தப்பட்டது. கருத்து கேட்பு கூட்டங்களில் மின் நுகர்வோர் கட்டணத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு மின்கட்டணத்தை கடந்த 10ம் தேதி இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் பொதுமக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மின்கட்டண உயர்வால் வீட்டு வாடகை உயரும் என பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவது தொடரும் என்றும், அதற்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே மின்கட்டணம் மற்ற மாநிலங்களை விட மிக குறைந்த அளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், விசைத்தறிக்கு 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், ஆண்டுக்கு 6 சதவீத உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரி கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்கூட்டத்தினை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி நாளை முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை: மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi

தமிழ்நாடு, புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை

EZHILARASAN D

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு: விரைவில் விசாரணை

EZHILARASAN D