டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு – பொதுமக்கள் கடும் அவதி..!

டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் மோசமடைந்திருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியின் காற்று…

டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் மோசமடைந்திருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியின் காற்று தரக்குறியீட்டு அளவு 309 புள்ளி என்ற அளவில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

கடந்த புதன்கிழமை இந்த குறியீட்டு அளவு 83 ஆகவும். வியாழக்கிழமை 117 ஆகவும் இருந்தது. தொடர்ந்து மோசமடைந்த காற்றின் தரம், நேற்று முன்தினம் 173 ஆக பதிவாகி இருந்தது. நேற்று காற்று தரக்குறியீட்டு அளவு 266 ஆக பதிவானது.

இதையும் படியுங்கள் : தோல்வியில் இருந்து மீளப்போவது யார்? – பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் காற்று மாசுபாடு குறையாததால் பொதுமக்கள் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். வாகனங்களில் இருந்தது வெளியேறும் புகை காற்று மாசுபாடு மோசமடைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.