தோல்வியில் இருந்து மீளப்போவது யார்? – பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதுகிறது. உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா,…

உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதுகிறது.

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.

அந்த வகையில் இன்று பாகிஸ்தான் அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நண்பகல் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. நடப்பு தொடரின் முதல் 2 லீக் ஆட்டங்களில் வெற்றி கண்ட பாகிஸ்தான் அணி அடுத்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதனால் தொடர் தோல்வியில் இருந்து மீண்டு, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் 

அதே நேரம் ஆப்கானிஸ்தானை பொறுத்த வரையில், ஒரு வெற்றி, மூன்று தோல்விகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் மேலே எழும்பி வர வேண்டும் என்ற முனைப்புடன் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியும், முதல் 4 இடங்களுக்குள் முன்னேறுவதை முன்னிட்டு, வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதாலும், 11 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை மண்ணில் பாகிஸ்தான் விளையாடுவதாலும் இன்றைய போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.