ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியதாக வந்த தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் இந்தியா. இந்த விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் அதை விற்க அரசு முடிவு செய்தது. கொரோனா தொற்று காரண மாக இந்த நிறுவனத்தின் விற்பனை நடவடிக்கை தாமதமானது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்த பணிகளை தொடங்கிய மத்திய அரசு, இதற்கான இறுதி ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது.
இதற்கு செப்டம்பர் 15-ஆம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. ஏர் இந்தியா நிறு வனத்தை வாங்குவதற்கான ஏல விவரங்களை டாடா, மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.
இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்கும் டாடா குழுமத்தின் ஏல திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக இன்று செய்திகள் பரபரப்பாக வெளியாகின.
மீடியாவில் வெளியாகும் இந்த தகவல் தவறானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவை ஏலத்துக்கு விட்ட விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு விரைவில் அறி விக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








