வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் வகையில், மின்னணு முறையில் புதிய இணையதளம் நிறுவப்பட்டுள்ளது. புதிய இணையதளம் வாயிலாக தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்குகள் உடனடியாக ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு வழங்கவேண்டிய தொகை விரைந்து கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய இணையதளத்தின் மூலம் வரி செலுத்துவோருக்கு இனி வருமான வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. புதிய இணையதளமான incometax.gov.in இன்று முதல் செயல்படவுள்ளது.