ஹரியானா மாநிலத்தில் கடைகளுடன் மதுக்கூடங்களையும் திறக்க ஹரியானா அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஹரியானாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதுவரை 7.62 லட்சம் பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். 7.43 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சில தளர்வுகளை ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஹரியானா மாநிலத்தில் கடைகளை காலை 9 முதல் மாலை 6 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களும், பார்களும் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை 50 சதவிகிதம் நபர்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு டெலிவரிகளும் இரவு 10 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.
வழிபாட்டுத் தலங்களில் 21 நபர்கள் ஒரே நேரத்தில் வழிபாடு செய்யலாம் / அதுபோல் திருமணம் மற்றும் இறுதி சடங்களில் 21 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. திருமண ஊர்வலத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.