சென்னை வைர வியாபாரியின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!

கான்பூரை தலைமையிடமாக கொண்ட வைர வியாபாரியின் சென்னை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள துளசிங்கம் தெருவில் உள்ள ராதா மோகன், புருசோத்தம தாஸ் என்னும் வைர வியாபாரி…

கான்பூரை தலைமையிடமாக கொண்ட வைர வியாபாரியின் சென்னை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள துளசிங்கம் தெருவில் உள்ள ராதா மோகன், புருசோத்தம தாஸ் என்னும் வைர வியாபாரி வீட்டில் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது தவிர அண்ணன் தம்பி இருவரும் ஷேர் மார்கெட் தொடர்பான தொழிலும் நடத்தி வந்துள்ளனர். இன்று காலை முதல் ஐந்து அதிகாரிகள் சோதனை மேற் கொண்டு வருகின்றனர்.

வருமான கணக்கு காட்டாமல் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து தொழில் செய்து வந்ததால் சோதனை நடத்தப்படுகிறது என வருமானவரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முழுமையான சோதனைக்கு பிறகே எவ்வளவு வரிஏய்ப்பு நடந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளிவரும் எனவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.