கவனக் குறைவின் காரணமாகவே என்னை போன்ற ஒரு சிலரின் பெயர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விடுபட்டிருந்தது என லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் பிரபல தமிழ் திரையுலக பெண் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் மலையாள திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து பல விருதுகளை வென்று பிரபலமானவர், பின்னர் தமிழ் திரையுலகில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், துணை நடிகையாகவும் அறிமுகமாகி தமிழில் சில படங்களை இயக்கியும் புகழ் பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் இவர் இயக்குனர் மற்றும் நடிகையாக பணியாற்றி இருந்தாலும், “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு அடையாளமாகி விட்டது.
நேற்று, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களுக்கும், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இது குறித்து இயக்குனர் மற்றும் நடிகருமான லட்சுமி ராம கிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில், கவனக் குறைவின் காரணமாகவே என்னை போன்ற ஒரு சிலரின் பெயர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விடுபட்டிருந்தது. தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி முதல்வருக்கு நன்றி. இது போன்ற விருதுகள் என்னை போன்ற கலைஞர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு மிகவும் சிறப்பாக செய்திருந்தது. உடனடியாக அதிகாரிகள் அதை சரி செய்து விருதை வழங்கி கௌரவித்தார்கள். எனக்கு பின்னாலிருந்து எனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து செய்தி வெளியிடுவது தவறானது. நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் திரைப்படம் இயக்கி வருகிறேன். படம் சிறப்பாக வந்துள்ளது. சினிமாக்காரர்கள் தான் என்னை அதிகமாக கிண்டல் செய்தனர். ஆனால் வெளியில் மக்கள் ஆதரவு எனக்கு அதிகமாக கிடைத்துள்ளது என்று கூறினார்.







