குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைக்கலாமா? குழந்தை உரிமைகள் ஆணையம் ஆலோசனை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் திரைப்படங்கள் மற்றும்…

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளில் குழந்தைகளை நடிக்க வைப்பது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது.

வெள்ளித்திரை, தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிகள் மற்றும் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரங்களை ஈடுபடுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் சரண்யா ஜெயக்குமார் தலைமையில் 6 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் சின்னத்திரை நடிகை சைலஜா தமிழ் சினிமா நடிகர் தயாரிப்பு அசோசியேஷன் செகரட்டரி T.சிவா உள்ளிட்ட திரைத்துறையினர், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தங்களை கருத்துக்களை தெரிவித்தனர்

இந்த கருத்துக்கள் குறித்து முழுமையான தகவல்களை டெல்லியில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து முழுமையான அறிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தலைவர் சரஸ்வதி ராமசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.