நெல்லையில் தொடர் மழை – தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக…

தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுமார் 10,000 கன அடி தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையும் படியுங்கள் : 2024-ம் ஆண்டில் 50 நாடுகளில் தேர்தல்!

அதனைத்தொடர்ந்து, கனமழை காரணமாக குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்து கோயிலுக்குள் நீர் புகுந்தது. மேலும், கோயிலின் கல் மண்டபங்கள் நீரில் மூழ்கிய நிலையில் உள்ளது. கனமழை குறித்து மாவட்ட நிர்வாகம் முன்பே எச்சரிக்கை வழங்கிய நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். 

இந்நிலையில், பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி, இராமநதி அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.