விருதுநகரில் திடீர் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

விருதுநகரில்,  ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். விருதுநகரில் சில நாட்களாகவே காலையில் வெயில் அடிப்பதும் மாலையில் மேகம் மூட்டமாகவும் இருந்து வந்தது.  இந்த நிலையில் நேற்று…

விருதுநகரில்,  ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகரில் சில நாட்களாகவே காலையில் வெயில் அடிப்பதும் மாலையில் மேகம்
மூட்டமாகவும் இருந்து வந்தது.  இந்த நிலையில் நேற்று மாலை விருதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது.
வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால்,  விருதுநகர் நகர் பகுதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  சூலக்கரை, அல்லம்பட்டி  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

பரவலாக பெய்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.