பழனி மலைக் கோயிலில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த ரூ. 2.55 கோடி | கோயில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி மலைக் கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2கோடியே 55லட்சத்து 37ஆயிரத்து 740 ரூபாய் உண்டியல் காணிகையாக கிடைத்ததாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு. தொடா் விடுமுறை நாள்களில் இந்தக்…

பழனி மலைக் கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2கோடியே 55லட்சத்து 37ஆயிரத்து 740 ரூபாய்
உண்டியல் காணிகையாக கிடைத்ததாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

தொடா் விடுமுறை நாள்களில் இந்தக் கோயிலுக்கு வந்த பக்தா்கள் கூட்டம் காரணமாக உண்டியல்கள் 20 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேசன், அறங்காவலா்கள், பிரதிநிதிகள், கல்லூரிப் பணியாளா்கள் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

இறுதியில் காணிக்கை ரொக்கம் ரூ. 2,55,37, 740, தங்கம் 965 கிராம், வெள்ளி 29,158 கிராம், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் நாடுகளின் பணத் தாள்கள் 574 கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உண்டியலில் தங்கத்தால் ஆன வேல், தாலி, மோதிரம், சங்கிலி, காசு, வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம், பித்தளையால் ஆன வேல், கைக் கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.