மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கெடு விதித்த பி.பி.டி.சி நிர்வாகம்!

45 நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என பி.பி.டி.சி நிர்வாகம் மாஞ்சோலை மக்களுக்கு கெடு விதித்துள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை காலம் முடிவதற்கு இன்னும் 4 ஆண்டுகளே உள்ள நிலையில், மாஞ்சோலை…

45 நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என பி.பி.டி.சி நிர்வாகம் மாஞ்சோலை மக்களுக்கு கெடு விதித்துள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை காலம் முடிவதற்கு இன்னும் 4 ஆண்டுகளே உள்ள நிலையில், மாஞ்சோலை பகுதியை வனத்துறை காப்புக்காடாக அறிவிக்க உச்சநீதிமன்றம் ஆணை வழங்கியது.

இந்த உத்தரவை தொடர்ந்து, மாஞ்சோலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை வெளியில் அனுப்பும் பணிகளை பி.பி.டி.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.