முக்கியச் செய்திகள் தமிழகம்

முல்லை பெரியாறு உரிமையை விட்டுத்தர மாட்டோம் – முன்னாள் அமைச்சர்

ஒரு நாளும் ஒரு பொழுதும் முல்லை பெரியாறு உரிமையை விட்டுத்தர மாட்டோம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் வரும் நவம்பர் 9ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெறவுள்ள முல்லை பெரியாறு மீட்பு போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்., “கேரள அரசு முல்லை பெரியாறு விவகாரத்தில் சட்டப்ட்டம் நடத்தி 142 அடி வரை முல்லை பெரியாற்றில் நீரை தேக்கிக் கொள்ள வரலாற்று தீர்ப்பை பெற்று தந்தது அதிமுக அரசு ஆனால் இன்று அந்த உரிமை பறிக்கப்படும் வண்ணம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகளோடு விவசாயிகள், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு என்றுமே விவசாயிகளுக்கான பிரதான அரசியல் இயக்கம் அதிமுக என்ற சிறப்போடு போராட்டத்தை நடத்தி காட்டுவோம் என்றும்.

இந்த போராட்டம் என்பது உண்மை நிலையை உலகிற்கு வெட்ட வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றும், உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்கின்ற வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக நமக்கு பெற்றுத் தந்துள்ள உரிமையை மீட்டெடுக்கின்ற, காப்பாற்றுகின்ற, உறுதி செய்கின்ற உரிமை குரலாக அமையும் எனவும்

அடுத்தகட்டமாக தலைமை கழக நிர்வாகிகளான முன்னாள் முதல்வர்கள் ஒபிஎஸ், இபிஎஸ் இதை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் ஆலோசனைபடி தொடர் போராட்டமாக தென்மாவட்டங்கள் முழுவதும் விவசாயிகள் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நிச்சயமாக ஒரு நாளும் ஒரு பொழுதும் முல்லை பெரியாறு உரிமையை விட்டுத்தர மாட்டோம் அதே நேரத்தில் உறவுகளை பலப்படுத்தி உறவுகளிலேயே விரிசல் ஏற்படாமல் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அணை பாதுகாப்பாகத் தான் இருக்கிறது என்பதை அறிவியல் பூர்வமான நிரூபித்து காட்டியுள்ள அந்த ஆதாரத்தின் அடிப்படையில் உரிமை முழக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம் என பேசினார்.

மேலும் 10% இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு., முன்னாள் முதல்வர் இபிஎஸ் ஏற்கனவே இந்த சட்ட மசோதாவை கொண்டு வருகிற போதே சட்டமன்றத்தில் தெளிவாக சொல்லியிருந்தார்., சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த உத்தரவு மற்றும் ஆணையிட்டுள்ளது., கணக்கெடுப்பின் முடிவில் கிடைக்கக்கூடிய புள்ளிவிவர அடிப்படையில் அனைவருக்கும் பாரபட்சமின்றி வாய்ப்பளிக்கும் விதமாக உள் ஒதுக்கீட்டுகளை அமல் படுத்துவோம் என சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.,

அதனை தான் இன்றும் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்., சட்டமன்றத்தில் குறிப்பிட்டது போல தான் இன்று தீர்ப்பு வந்துள்ளது என நாங்கள் அறிகிறோம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் உயிரிழப்பு

Halley Karthik

1 முதல் 5-ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு

G SaravanaKumar

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், இரண்டு துணை மேயர் பதவி: திமுக

Arivazhagan Chinnasamy