முக்கியச் செய்திகள் இந்தியா

தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மனைவி

தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனுக்கு செருப்பு மாலை அணிவித்து, மின்கம்பத்தில் கட்டிவைத்து மனைவி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அகிலாவை பிரிந்து சென்ற ஸ்ரீகாந்த், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஹன்மகொண்டாவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அகிலா, தனது உறவினர்களுடன் ஹன்மகொண்டா சென்று ஸ்ரீகாந்த்தை ஸ்வர்ணபள்ளிக்கு அழைத்து வந்தார். பின்னர், ஸ்ரீகாந்த்தை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார். மேலும், செருப்பை மாலையை அணிவித்தார். இந்நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்த்தை மீட்டனர், பின்னர், அகிலா கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெற்ற குழந்தையை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற குடிகார தந்தை!

Vandhana

கணினி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து; 2 பேர் பலி

G SaravanaKumar

மக்களவையில் தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

Halley Karthik