முக்கியச் செய்திகள் சினிமா

வெளியாவதற்கு முன்பே பிரின்ஸ் படம் செய்த வசூல் சாதனை!

இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களிலே இப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங்காக அமைந்துள்ளது.

தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் எனும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமடி ஜானரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் பிரேம்ஜி இப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இப்படத்தைத் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் சிங்கிள் அனிருத் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் எனப் படக்குழு உறுதிப்படுத்திய நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் கைப்பற்றியுள்ளது.

மொத்தம் 42 கோடிக்கு இவ்விரு உரிமமும் விற்பனையானதன் மூலம் இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களிலே இப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங்காக இருக்கும் எனக் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் பட அறிவிப்புகள் வெளிவருவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எஸ்பிபி குரலில் எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் பாடல்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்!

Jayapriya

கொரோனாவின் கோரத்தாண்டவம்

Arivazhagan Chinnasamy

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்படும் சிறுவர்கள்!

G SaravanaKumar