தமிழ்நாட்டில் ரூ.1.20கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல்!

ரூ.1.20 கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை…

ரூ.1.20 கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு 
காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் போதை பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் விஜயவாடா பகுதியிலிருந்து துல்லியமான தகவல்கள் இது தொடர்பாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 12.04.2023 தேதி ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவிலான கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் மதுரை ,விழுப்புரம் மற்றும் சேலம் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர்கள் குழுவுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு சேலம் மற்றும் அவர் குழுவுடன் சேலம் மாவட்டம், வாழப்பாடி, மேட்டுப்பட்டி சோதனை சாவடி அருகில் வெள்ளை நிறம் கொண்ட காரை மடக்கி சோதனை செய்ததில் அதன் உள்ளே 200 கிலோ கொண்ட கஞ்சா மற்றும் கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டுள்ள
வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. 

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.