முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில், தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது.

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக, 20 ஆயிரத்து 911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 610 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் 8 ஆயிரத்து 218 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 30 பேருக்கும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 162 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 901 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 538 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 502 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி 25 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

எமதர்ம ராஜ வேடத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நபர்!

Halley Karthik

விவசாயிகள் போராட்டம்: ஹாலிவுட் மூத்த நடிகை சூசன் சரண்டன் ஆதரவு!

Jayapriya

பொதுப்பணித் துறை சார்ந்த டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெறும்: அமைச்சர் எ.வ.வேலு

Gayathri Venkatesan