முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரவாரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரவாரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மதுரை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாடி வாசல் அமைக்கும் பணி, பார்வையாளர்கள் மேடை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.மேலும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண அனுமதியை மீறி பொதுமக்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக 40 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு பணியில் 1800 காவலர்கள் ஈடுபட உள்ளனர். ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் போட்டியில் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் முழுவதும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Advertisement:
SHARE

Related posts

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சிறப்பு உணவுத் திட்டம்; ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு

Ezhilarasan

இந்தியாவில் புதிதாக 29, 616 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

Ezhilarasan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஷாக் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ்

Gayathri Venkatesan