பொங்கல் விடுமுறையையொட்டி, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல மக்கள், அதிகளவில் படையெடுத்ததால், பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழர்களின் முக்கியமான பண்டிகையான தைத் திருநாள் நாளை கொண்டாடப்டுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் அதிகளவில் புறப்பட்டு செல்கின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் அதிகளவில் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம், போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
சென்னை பூவிருந்தவல்லி பகுதியிலிருந்து 220 சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 752 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக பொதுமக்கள் அதிகளவில் தங்களது சொந்த வாகனங்களிலும் பயணிப்பதால், பூவிருந்தவல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.







