முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பத்திரிக்கை சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 140-வது இடம்

சர்வதேச நாடுகளில் பத்திரிகை சுந்தந்திரம் எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்பது தொடர்பாக (Reporters Without Borders) அமைப்பு நடத்திய கருத்துகணிப்பில் இந்தியாவுக்கு 140-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரம் எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்பது குறித்த தரவரிசைப்பட்டியலில் இந்தியா பின்தங்கி இருபதற்கான காரணங்கள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் கண்கானிப்பு பிரிவு சார்பில் நேற்று கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இக்கூட்டத்தை முன்னாள் ஐஐஎஸ் (IIS) அதிகாரி குல்தீப் சிங் தத்வாலி தலைமை வகித்தார். நாட்டின் முக்கிய பத்திரிகையாளர் சாய்நாத் உட்பட அரசு அலுவலகர்கள் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பத்திரிக்கை நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படுவதற்கு முன்பு முன் இந்திய பத்திரிகை மன்றத்தின் (Press Council of india) ஒப்புதல் பெறவேண்டும் என்பதுபோன்ற பல முக்கிய பரிந்துரைகள் எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சாய்நாத் 12 பக்கங்கள் கொண்ட விரிவான கட்டுரையை விளக்கி பேசினார் அதில், “பத்திரிகை சுதந்திரத்தின் முக்கிய புள்ளியே கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை வழங்குவதுதான். சமகாலத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களை பதிவு செய்த பத்திரிகையாளர்கள் மீது தேசத்ரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் போராட்டங்கள் நடைபெறும் குறிப்பிட்ட பகுதிகளில் மாதக் கணக்கில் இணையவசதி துண்டிக்கப்படுகிறது. இதுபோன்ற பத்திரிகைகள் மீதான தடைகள் நீக்கப்படவேண்டும். கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை அரசு முடக்ககூடாது” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக பொதுக்குழு விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் மேல்முறையீடு

Web Editor

தொழிலதிபரின் சொத்துகளை எழுதி வாங்கியதாக புகார்: 6 போலீசார் மீது வழக்கு

Halley Karthik

பணத்தை பதுக்க என் வீட்டை பயன்படுத்திக்கொண்டார்: அர்பிதா

Mohan Dass