தெலங்கானாவில் நாளை முதல் பொது ஊரடங்கு முழுமையாக ரத்து

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று பொது ஊரடங்கு நாளைமுதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அந்த மாநிலத்தின் அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் தெலங்கானாவில் கடந்த 8ம் தேதி முதல்…

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று பொது ஊரடங்கு நாளைமுதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அந்த மாநிலத்தின் அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் தெலங்கானாவில் கடந்த 8ம் தேதி முதல் மேலும் 10 நாட்களுகு நீட்டிக்கப்பட்டது. அதன்படி பொது ஊரடங்கு இன்று முடிவடைகிறது. இந்நிலையில் பொது ஊரடங்கை நீடிப்பது குறித்து அந்த மாநில மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு தெலங்கானா மாநில அமைச்சரவைக்கூட்டம் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் பிரகதி பவனில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், “மாநிலம் முழுவதும் வரும் 20ம் தேதி முதல் பொது ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவல் நிலை மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைகளின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என கூறப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் 18ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1417ஆக உள்ளது. அங்கு கொரோனாவால் நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதுவரை அந்த மாநிலத்தில் 3546 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.