லாரி மோதி மாணவி உயிரிழப்பு; தாயின் கண் முன் நடந்த கொடூரம்

புதுச்சேரியில் தண்ணீர் லாரி மோதியதில் 10ம் வகுப்பு மாணவி ஹரிணி தாயின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் அனுமந்தைப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம்…

புதுச்சேரியில் தண்ணீர் லாரி மோதியதில் 10ம் வகுப்பு மாணவி ஹரிணி தாயின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் அனுமந்தைப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஹரிணி (வயது 15)  உடல்நிலை சரியில்லாததால் அவரது தாயாருடன் புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவம் பாரத்த பின்னர் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக ராஜீவ் காந்தி சதுக்கத்தில் உள்ள சாலையை அவரது தாயுடன் கடக்க முயன்றபோது தண்ணீர் ஏற்றி வந்த லாரி மாணவி ஹரிணி மீது மோதியது. இதில் மாணவி ஹரிணியின் தலையில் லாரி ஏறி இறங்கியதில்,  தாயின் கண் முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தன்வந்திரி நகர் போக்குவரத்து காவல் துறையினர் விபத்த குறித்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.